BREAKING NEWS

தேர்தலில் போட்டியிட மிட்டா மிராசுகளுக்குத்தான் காங்கிரஸ் வாய்ப்பு கொடுக்கும்

தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி மிட்டா மிராசுகளுக்குத்தான் வாய்ப்பு கொடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மிட்டா மிராசுளுக்கு வாய்ப்பு

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் சாமானிய தொண்டர் அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் அந்த தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத கோடீஸ்வரர் ரூபிமனோகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் மிட்டா மிராசுகளுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். 100 சதவீதத்தில் 90 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சியில் வசதி படைத்தவர்கள்தான். நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பெரும் கோடீஸ்வரர். ஏழை பங்காளர்களை கொண்ட கட்சி அ.தி.மு.க.தான். அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா வழியில் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆட்சி மன்ற குழு எளிய தொண்டர்களை தேர்ந்தெடுக்கும்.

.தி.மு.க வெற்றி பெறும்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களை பொய் வாக்குறுதி கொடுத்து தி.மு.க. கூட்டணி வென்றது. ஆனால் வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி வித்தியாசம் வெறும் 7 ஆயிரம்தான். மக்கள் அ.தி.மு.க.வை நன்கு புரிந்துள்ளனர். நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அ.தி.மு.க. 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *