தற்போதைய செய்திகள்
vbk-forest fire

தேனி குரங்கணி காட்டுத் தீ விபத்தில்-பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு….

மதுரை,

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில், மதுரையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ்குமார் என்பவர் நேற்று இறந்தார்.

காட்டு தீயில் சிக்கி பலி

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ந் தேதி மாலை தீப்பிடித்தது. இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கி கொண்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மறுநாள் மீட்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்திருந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அணுவித்யா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக மரணமடைந்தனர்.

மேலும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த சத்யகலா மற்றும் சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆனது.

17 ஆக உயர்ந்தது

இந்தநிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஈரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.
Leave a Reply