BREAKING NEWS

தெலுங்கு படத்தில் சூர்யா?

தமிழில் முன்னணி நடிகரான சூர்யாவுக்கு தெலுங்கு பட உலகிலும் வரவேற்பு இருக்கிறது. ஆனாலும் சூர்யா நேரடி தெலுங்கு படத்தில் நடித்ததில்லை.
சூர்யாவின் காப்பான் படம் கடந்த வாரம் வெளியானது. இதையடுத்து சுதா கொங்காரா இயக்கும் ‘‘சூரரை போற்று‘‘ படத்தில் சூர்யா நடித்து வந்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. இந்நிலையில், சூர்யா அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஐதராபாத் சென்ற சூர்யா, பிரபல தெலுங்கு பட இயக்குனர் பி.வி.எஸ்.ரவி மற்றும் கதாசிரியர் கோபி மோகனை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு தயாரிப்பாளர் மோகன் பாபு வீட்டில் நடந்துள்ளது.
மோகன் பாபு சூர்யாவின் சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது சூர்யாவின் நண்பரும் நடிகருமான விஷ்ணு மஞ்சுவும் உடன் இருந்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *