BREAKING NEWS

தெரு பெயர் மாற்றத்தை வலியுறுத்தி பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவில், அதிபர் டிரம்ப் வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள தெருவுக்கு, முன்னாள் அதிபர் ஒபாமாவின் பெயரை சூட்ட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

நியூயார்க்கில் உள்ள அதிபர் டிரம்பின் வீடு அமைந்துள்ள தெருவுக்கு, ‘டிரம்ப் டவர்’ 5-வது தெரு என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பெயரை மாற்றி, தெருவுக்கு ‘‘வெல்கம் டூ ஓபாமா அவென்யு’’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி 30க்கு மேற்பட்டோர் பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.

‘மூவ்ஆன்’ அமைப்பு சார்பில் ‘டிரம்ப் டவர்’ முன் நடந்த இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த பெயர் மாற்றத்தை வலியுறுத்தி 4 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தெருவின் பெயரை மாற்றும் கருத்துக்கு தான் ஆதரவளிக்கவில்லை என, ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவரும் நியூயார்க் நகர கவுன்சில் சபாநாயகருமான கோரோ ஜான்சன் தெரிவித்துள்ளார்.




Leave a Reply