BREAKING NEWS

தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு, தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கொந்தளிக்கும் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை.

தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு, தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கொந்தளிக்கும் – டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை.

சென்னை, மே 23-

தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கி சூடு நடந்து உள்ளது தாக்குதல் தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழகமு் கொந்தளிக்கும் என்று டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

பதற்றம்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடியில் காவல்துறையினர் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியிலும் காவல்துறையினரின் ஒடுக்குமுறை காரணமான பொதுமக்களுடன் ஏற்பட்ட மோதலைப் பயன்படுத்தி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி இளைஞர் ஒருவரை கொன்றுள்ளனர். இதுவும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலை என்பதில் சந்தேகமில்லை.

மனித உரிமை

தூத்துக்குடிக்கு மனித உரிமை செயல்பாட்டாளர்கள், நீதித்துறையினர் அடங்கிய குழுவை அனுப்பி மாவட்டத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள காவல் படைகளை திரும்பப்பெற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும் நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.




Leave a Reply