BREAKING NEWS

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 7-ந்தேதி அமெரிக்கா பயணம்

அரசுமுறை பயணமாக வருகிற 7ஆம் தேதி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அமெரிக்கா செல்கிறார்.அமெரிக்கா பயணம்கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு 8835 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டதாகவும், தமிழகத்தில் புதிதாக 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாள் பயணமாக வரும் 7-ம் தேதி அமெரிக்காவுக்கு புறப்படுகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது சிகாகோ உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் அமெரிக்கா செல்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *