BREAKING NEWS

தீவிரவாதியை போன்று கைது செய்யப்பட்டேன் – நடிகர் மன்சூர் அலிகான் வேதனை.

 

 

 

நடிகர் மன்சூர் அலிகான்

சேலம் முதல் சென்னை 8 வழிச் சாலை அமைத்தால் 8 பேரை வெட்டுவேன்’ என்று பேசியதால் நடிகர் மன்சூர் அலிகான் சேலம் தீவட்டிப்பட்டி காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓமலூர் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில், சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மோகன்ராஜ் ஜாமீன் வழங்கியுள்ளார். சேலம் காமலாபுரம் விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்காக அதைச் சுற்றியுள்ள 570 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

சர்ச்சை பேச்சு

அந்தப் பகுதிகளுக்கு கடந்த மாதம் சென்ற நடிகர் மன்சூர் அலிகான் தும்பிப்பாடி மாரியம்மன் கோயில் அருகே விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் பேசினார். அப்போது விமான நிலைய விரிவாக்கத்துக்கு மட்டுமல்ல 8 வழிச் சாலை வந்தால் 8 பேரை வெட்டுவேன் என்று பேசியுள்ளார்.

இதையடுத்து, சேலம் தீவட்டிப்பட்டி காவல்துறையினர் அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர். அதையடுத்து கடந்த 17-ம் தேதி சென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு, ஓமலூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் 8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

ஜாமீன்

மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை விசாரித்த ஓமலூர் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் நிராகரித்தது. அதையடுத்து, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மோகன்ராஜ், மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியிருக்கிறார்.

இந்த நிலையில் பேட்டியளித்துள்ள நடிகர் மன்சூர் அலிகான், தாம் தீவிரவாதியை போன்று கைது செய்யப்பட்டதாகவும், தமது கைது குறித்து முன்னரே தெரிந்து இருந்தால் இதுகுறித்து விளக்கம் அளித்து இருப்பேன் என்றும் அவர் கூறி உள்ளார்.

——-




Leave a Reply