BREAKING NEWS

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய  20 நிமிடங்களிலே விற்று தீர்ந்தது டிக்கெட்.

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 3-ந் தேதிக்கான ெரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கிய 20 நிமிடங்களியே விற்று தீர்ந்தது.

தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ந் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் 120 நாட்களுக்கு முன்பே ெரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

20 நிமிடங்களில் விற்று தீர்த்தது

நவம்பர் 2-ந் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 2 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இந்நிலையில், நவம்பர் 3-ந் தேதி (சனிக்கிழமை) பயணிப்பதற்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பாண்டியன் மற்றும் நெல்லை விரைவு ெரயில்களுக்கான முன்பதிவு 20 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன.

பயணிகள் ஏமாற்றம்

சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ெரயில் நிலையங்களில் அதிகாலை முதலே ஏராளமான பயணிகள் டிக்கெட் முன்பதிவுசெய்ய ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், வழக்கம்போல், எதிர்பார்த்தபடியே ெரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 20 நிமிடங்களிலேயே அனைத்து ெரயில் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நவம்பர் 4-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்டு செல்பவர்கள் ஜூலை 7-ந் தேதி முன்பதிவு செய்யலாம்.




Leave a Reply