BREAKING NEWS

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு 9-வது நாளாக தீவிர சிகிச்சை: குடியரசுத் தலைவர் நலம் விசாரித்தார் – விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.


மருத்துவமனையில் அனுமதி

தி.மு.க. தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்திலே ஓய்வு பெற்று வருகிறார். கடந்த மாதம் அவருக்கு தொண்டையில் பொருத்தப்பட்ட டிரக்யோஸ்டமி குழாய் மாற்றப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு கடந்த மாத இறுதியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ேமலும், அவருக்கு உடல்நலிவு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று சந்தித்தனர். இதையடுத்து, அவர் கடந்த 27-ந் தேதி சென்னை, ஆழ்வார்பேட்டையில் உளள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால், மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பலனாக, அவரது ரத்த அழுத்தம் சீரானது. இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கடந்த 29-ந் தேதி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

தலைவர்கள் வருகை

மேலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இந்த நிலையில், அன்றிரவு அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனால், மிகுந்த வேதனையுடன் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால், அவரது உடல்நிலை சீராக்கப்பட்டது. இதனால், அவரது உடல்நிலை தேறிவருவதாக மு.க.ஸ்டாலினும், கனிமொழியும் தொண்டர்களுக்கு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, அவரை முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கி.வீரமணி, திருநாவுக்கரசர், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட பல்ேவறு தலைவர்களும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

வெளிநாட்டு தலைவர்கள்

அவரது உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பிணராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். மேலும், மலேசிய சபாநாயகர், அந்நாட்டு எம்.பி.க்கள், இலங்கை எம்.பி. ஆகியோரும் கருணாநிதியின் குடும்பத்தாரை ேநரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

குடியரசுத் தலைவர்

கருணாநிதிக்கு 9-வது நாளாக நேற்று தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐதராபாத்தில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆந்திரா வந்தார். அந்த மாநிலத்தில், ஐ.ஐ.டி. நிகழ்ச்சிகளை முடித்தபிறகு விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து நேரடியாக, கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு மாலை 3.45 மணியளவில் வந்தடைந்தார். பின்னர், அவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

வாழ்த்து

பின்னர், குடியரசுத் தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கருணாநிதியைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கருணாநிதி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.




Leave a Reply