தற்போதைய செய்திகள்
ops

தி.மு.க., கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தூண்டுகின்றன துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு….

சென்னை, ஜன. 10-

போக்குவரத்து ெதாழிலாளர்களின் போராட்டத்தை தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் தூண்டிவிடுகின்றன என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சட்டசபையில் குற்றம்சாட்டியுள்ளார்.

போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த வியாழன் முதல் தொடர்ந்து 5 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக சட்டசபை நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் கூடியது. அப்போது, போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டசபையில் தெரிவித்தார்.

இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தொழிற்சங்கங்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு வார்த்தை நடத்தினால் இந்த பிரச்சினை சுமூகமாக முடியும். அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

தூண்டுகின்றன

அதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எனது ஆலோசனையை பெற்றுதான் போக்குவரத்து துறை அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். தி.மு.க. ஆட்சியிலும் ரூ.922 கோடி நிலுவை தொகை இருந்தது. தற்போது நிதி நெருக்கடி இருப்பது எதிர்கட்சிகளுக்கு தெரியும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் போதே பேச்சுவார்த்தை தோல்வி என்று தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்டு தொழிற்சங்கத்தினர் வாட்ஸ் அப் மூலம் பீதியை கிளப்பினார்கள். அவர்கள் ேபாக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தூண்டி விட்டனர். இவ்வாறு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
Leave a Reply