BREAKING NEWS

திரைப்பட சண்டை காட்சிகளுக்கு மாநிலத்தின் 50 சதவீதம் கலைஞர்கள் பணியமர்த்த வேண்டும் – விரைவில் புதிய ஒப்பந்தம்.

 

ஒரு திரைப்படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்கு மாநிலத்தின் 50 சதவீதம் கலைஞர்களையே பணியமர்த்த வேண்டும் என்று ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கம் விரைவில் ஒப்பந்தம் போடப்படுகிறது.

தென்னிந்திய சினிமா ஸ்டண்ட் கலைஞர் சங்கத்தின் தலைவராக உள்ள சுப்ரீம் சுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது, இதுவரையில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்படும் போது பெரும்பாலும் ஸ்டண்ட் சங்க ஒப்பந்தப்படி 70:30 என்ற அடிப்படையிலேயே ஸ்டண்ட் கலைஞர்கள் பணியமர்த்தப்பட்டு வந்தனர், இதன் மூலம் 30 சதவீதம் தயாரிப்பு மாநிலத்திலும் 70 சதவீதம் பிற மாநில கலைஞர்களும் பயன்படுத்தப்பட்டனர், இந்த ஒப்பந்தமானது மாநில கலைஞர்களுக்கு மிகுந்த சிரமம் இருந்து வந்தது.

புதிய ஒப்பந்தம்

எனவே இந்த புதிய ஒப்பந்தம் மூலம் தற்போது இருக்கும் 70:30 என்ற பணியமர்த்த ஒப்பந்தம் மாற்றம் செய்யப்பட்டு 50:50 என்ற புதிய ஒப்பந்தம் கையெழுத்திட இருக்கிறோம். இதனால் திரைப்பட தயாரிப்பில் மாநில ஸ்டண்ட் கலைஞர்கள் சரிவிகித அளவில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் சரியான சுகாதார காப்பீடும் அவர்களுக்கு பெற்று தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply