BREAKING NEWS

திருப்பதி கோவில் ஆர்ஜித சேவா டிக்கெட் வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.அதன் படி காலை 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான 69,512 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையளத்தில் வெளியிட்டது. இதை பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம்.

இதில் சுப்ரபாதம் உள்ளிட்ட சில முக்கிய ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வருகிறது.தகவல் கிடைத்த பக்தர்கள் 3 நாட்களுக்குள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு பெற்றுக் கொள்ளாத டிக்கெட்டுகளை மீண்டும் தேவஸ்தானம் குலுக்கல் முறையில் விண்ணப்பித்த மற்ற பக்தர்களுக்கு வழங்குகிறது.குலுக்கள் முறையில் உள்ள டிக்கெட்டுகள் வருமாறு:சுப்ரபாதம்-7,332, தோமாலை-120, அர்ச்சனை-120, அஷ்ட தளபாதபத்மாராதனை-240, நிஜபதம்-2,300, மொத்தம்-10,112.கல்யாண உற்சவம்-13,300, ஆர்ஜித பிரம்மோற்சவம்-7,700, வசந்தோற்சவம்-15,400, ஊஞ்சல்சேவை-4,200, சகஸ்ரதீபாலங்கார சேவை-16,800, விசே‌ஷபூஜை-2,000, மொத்தம்-59,400.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *