திருச்செந்தூரில் சாதனைவிளக்க புகைப்பட கண்காட்சி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்து பார்வையிட்டார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் திருக்கோயில் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி திறப்பு விழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு கண்காட்சியினை திறந்து வைத்து பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடத்த பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசின் சாதனை மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பக்தர்கள் தெரிந்துகொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது. இக்கண்காட்சியில், தமிழக அரசின் திட்டங்கள், அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், கந்த சஷ்டி திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள், தமிழக அரசின் திட்டங்களை தெரிந்துகொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் குறும்படங்கள் திரையிடப்படுகிறது. கந்த சஷ்டி திருவிழாவுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் மற்றும் சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவையான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் செயல் அலுவலர் அம்ரீத், உதவி ஆட்சியர் (பயிற்சி மதுரை) ஜோதிசர்மா, உதவி ஆட்சியர் (பயிற்சி திருநெல்வேலி) சிவகுருபிரபாகர், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தனப்ரியா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மாகின் அபுபக்கர், இந்து சமய அறநிலையத்துறை உதவி செயற்பொறியாளர் முருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நி.சையத் முஹம்மத் (செய்தி), ராமசுப்பிரமணியன் (விளம்பரம்), திருச்செந்தூர் வட்டாட்சியர் ஞானராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவையொட்டி, செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பாக அமைக்கப்பட்ட அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *