BREAKING NEWS

(திருச்சி)“மாணவர்களிடமிருந்து மாற்றம்’’ என்ற திட்டத்தில் 1095 மாணவர்களுக்கு பரிசுகள் திருச்சி மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது

 

 

 

“மாணவர்களிடமிருந்து மாற்றம்’’ என்ற திட்டத்தின் வாயிலாக மக்கும் மற்றும் மக்காத கழிவுகளாக தரம்பிரித்து கொடுத்த மாநகராட்சிக்குட்பட்ட 365 பள்ளி மாணவ, மாணவிகள் தூய்மை அட்டையினை தேர்வு செய்து 1095 நபர்களுக்கு தூய வளனார் கல்லூரி லாலி ஹாலில் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

சிறப்புரை

இந்தவிழாவில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, காவல் துறை ஆணையர் அ.அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் ந. இரவிச்சந்திரன் ஆகியோர் முதல் பரிசாக ரூ. 7,000 மதிப்புள்ள மிதிவண்டி 365 மாணவ, மாணவிகளுக்கும் நேற்று வழங்கினார்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் முறையே ரூ. 1000 மதிப்புள்ள ஒரு கைகெடிகாரம், ரூ. 500 மதிப்புள்ள ஒரு ஆக்ஸ்போர்டு டிக்ஷனரிகள் 730 நபர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பொதுமக்களிடமிருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்கு மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மாநகரில் உள்ள 365 பள்ளிகளில் படிக்கும் சுமார் 1,75,000 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் மூலம் பொற்றோர்களுக்கு தூய்மை அட்டைகள் வழங்கப்பட்டு கடந்த 01.07.2018 முதல் 31.07.2018 வரை அவரவர் வீடுகளில் தினசரி உருவாகும் திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத கழிவுகளாக தரம்பிரித்து மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களிடம் வழங்கி தூய்மை அட்டையில் மாநகராட்சி பணியாளர்கள் கையொப்பமிட்டும்,

தினசரி மாநகராட்சி பணியாளர்கள் வீடுதோறும் வந்து திடக்கழிவு சேகரிப்பதை உறுதி செய்ய தூய்மை அட்டையில் பெற்றோர்கள் கையொப்பமிட்டு திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ரூ.25 மதிப்பு

இத்திட்டத்தில் பங்கேற்ற சுமார் 1,75,000 பள்ளி மாணவ/மாணவிகளுக்கு அவர்களை பாராட்டி ஒவ்வொருவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் (தூய்மை சான்று) மாநகராட்சி மூலம் வழங்கப்பட உள்ளது.

இந்த விழிப்புணர்வு திட்டத்தின் மூலம் மாநகரில் உள்ள சுமார் 5,00,000 பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் தங்கள் இல்லங்களில் தினசரி ஏற்படும் திடக்கழிவுளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து கொடுக்கும் அளவுக்கு விழிப்புணர்வு அடைந்துள்ளனர்.

இந்த பரிசுப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரு.25 லட்சங்களாகும். மாணவர்களிடமிருந்து மாற்றம் என்ற திட்டத்தின் மூலம் சுமார் 1,75,000 மாணவ மாணவிகள் மற்றும் அவர்கள் குடும்பங்களை சேர்ந்த சுமார் 5,00,000 லட்சம் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர்.

இந்த திட்டத்தை வெற்றியடையச் செய்த தலைமையாசிரியர்கள், ஆசியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் மாநகராட்சி ஆணையர் நன்றியை தெரிவித்தார்கள்.




Leave a Reply