BREAKING NEWS

திராவிட பூமியில் வேறெந்த விதையும் முளைக்காது பாஜக வெற்றி குறித்து கி.வீரமணி கருத்து

திராவிட பூமியில் வேறெந்த விதையும் முளைக்காது என்று பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி குறித்து திராவிட கழகத்தலைவர் கி வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

உரிமைகளை மீட்க போராடுவார்கள்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாடளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற தி.மு.க உறுப்பினர்கள் பெரியார் திடலில் நேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, ‘டெல்லியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள தமிழக உரிமைகளை தற்போது தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடளுமன்ற உறுப்பினர்கள் மீட்க போராடுவார்கள் என்று தெரிவித்தார்.

திராவிட கொள்கை வலுபெறும்

மோடி தலைமையிலான அரசு தமிழகத்தின் உரிமைகளுக்கு செவிசாய்க்காமல் இருந்தால் அது ஜனநாயகம் இல்லை என்று கூறிய கி.வீரமணி ஓட்டுபோட்டவர்களுக்கும் ஓட்டு போடாதவர்களுக்கும் மோடி தான் பிரதமர் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கி.வீரமணி திமுக கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றியின் மூலம் திராவிட கொள்கைகள் வலுப்பெறும் என்று தெரிவித்தார்.

வேறு கொள்கை விதைகள் முளைக்காது

தமிழகத்தில் மாற்றத்திற்கான காலம் நெருங்கிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட கி.வீரமணி பெரியார் மண்ணான தமிழகத்தில் வேறெந்த கொள்கைகளுக்கான விதைகளை விதைத்தாலும் முளைக்காது என்று தெரிவித்தார்.




Leave a Reply