BREAKING NEWS

திபெத்தில் சீன ராணுவம் போர் ஒத்திகை.


 

இந்தியா – சீனா – பூட்டான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் சாலை அமைக்க சீனா முயன்றது இதற்கு, நமது படைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்த பணிகளை நிறுத்தின. அதை தொடர்ந்து, சிக்கிம் எல்லையில் பதற்றமான சூழ்நிலை உருவானது.

பிரதமர் மோடியின் சீன பயணத்திற்கு பின்னர் நிலைமை சீரானது. இந்நிலையில் இந்திய-சீன எல்லைப்பகுதியான திபெத்தில் சீனா ராணுவத்தினர் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சீன ராணுவத்தினர் தங்களது போர் தளவாடங்கள், மற்றும் ஆயுதங்களை பரிசோதித்து பார்ப்பதற்காக இது போன்ற போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக சீனா தரப்பு தெரிவிக்கிறது. டோக்லாம் அத்துமீறலுக்கு பின்னர் முதன்முறையாக சீன ராணுவத்தின் இந்த அத்துமீறல் நடந்துள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.




Leave a Reply