BREAKING NEWS

திங்கட்கிழமை முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் தற்போது மேலடுக்கு சுழற்சி உருவாகி வருவதால் வருகிற 28ந் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ந் தேதி தொடங்கியது முதல் பரவலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மழை பெய்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

இந்த நிலையில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஓமன் நாட்டை நோக்கி நகர்ந்தது.இதன் காரணமாக தமிழகத்தின் ஈரப்பதத்தை காற்று ஈர்த்து செல்வதால் தமிழகத்தில் மழை குறைந்து விட்டது. நேற்றும், இன்றும் வெயில் அடிக்கிறது. இதேபோல் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஒடிசா நோக்கி சென்றதால் வட தமிழகத்திலும் வறண்ட வானிலை காணப்படுகிறது.

இதுகுறித்து வானிலை மைய அதிகாரி கூறியதாவது:அரபிக்கடல், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி நகர்ந்து சென்று விட்டதால் தமிழகத்தில் மழை குறைந்து விட்டது. 2 நாட்களுக்கு பெரிய அளவில் மழை இருக்காது.வெப்பச்சலனம் காரணமாக சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய வடமேற்கு மாவட்டங்களில் மட்டும் மழையை எதிர்பார்க்கலாம்.

வங்கக்கடலில் தற்போது மேலடுக்கு சுழற்சி உருவாகி வருகிறது. இது வருகிற 28ந் தேதி (திங்கட்கிழமை) தமிழகத்துக்கு மீண்டும் மழையை தரும். 28 மற்றும் 29ந் தேதிகளில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *