BREAKING NEWS

தவறாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்கள் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பரிந்துரைக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

 

 


28 ஆண்டுகள்

இது குறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் தவறாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடி வரும் நிலையில், அவர்களை விடுதலை செய்வதில் தமக்கோ, குடும்பத்தினருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

சிறையில் உள்ளவர்களை விடுதலை தமிழக அரசு தீர்மானித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மத்திய அரசு, அதன்பின் நான்கரை ஆண்டுகளாகியும் அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

தர்மத்தின்படி..

இத்தகைய சூழலில் தான் ராகுல் காந்தியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அவர் நினைத்தால் 7 தமிழர்களும் நிச்சயமாக விடுதலை ஆவார்கள்.

சட்டப்படி பார்த்தாலும், தர்மத்தின்படி பார்த்தாலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் தான். அந்த அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்படுள்ளது.




Leave a Reply