தற்போதைய செய்திகள்

தர்மபுரி அருகே நெடுஞ்சாலையில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது-ரூ.50 லட்சத்துக்கு கணவனை கொலை செய்த பெண் கள்ளக்காதலனுடன் சிக்கினாள்….

தர்மபுாி,

ரூ.55 லட்சம் இன்சூரன்ஸ் தொகைக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே ஜவுளி வியாபாரியை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
வியாபாரி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டி நேதாஜிநகரை சேர்ந்தவர் மாதேசன் (வயது 45). இவர் தேன்கனிக்கோட்டையில் ஜவுளிக்கடை நடத்திவந்தார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி தர்மபுரி-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் மாதேசன் மர்மான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் பெற்ற காரிமங்கலம் போலீசார் மாதேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அவர் வாகனம் மோதி இறந்தாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து இங்கு கொண்டுவந்து வீசி சென்றார்களா? என்று செய்து விசாரணை நடத்தினர்.
இன்சூரன்ஸ

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேவதியின் மூத்த மகன் யோகேஷ் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சென்று தனது தந்தை மாதேசனின் பிரேத பரிசோதனை சான்றை தரும்படி கேட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த போலீஸ்காரர் எதற்காக உனக்கு தேவைப்படுகிறது, என கேட்டுள்ளார். அதற்கு யோகேஷ், தன் தந்தையின் பெயரில் இன்சூரன்ஸ் செய்துள்ளோம். அந்த பணத்தை அலுவலகத்தில் இருந்து பெற தேவைப்படுகிறது என்றார்.

இந்த பதில் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் ரேவதியின் வீட்டிற்கு சென்று அவர் மற்றும் மகன் யோகேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த மாதேசனின் இளைய மகன், என் தந்தையின் சாவில் சந்தேகம் உள்ளது என்று போலீசாரிடம் சந்தேகம் தெரிவித்தார்.
கிடுக்குப்பிடி
இதனை தொடர்ந்து ரேவதி மற்றும் அவரது மூத்த மகன் யோகேஷ் ஆகியோரிடம் பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் முன்னிலையில் போலீசார் ‘கிடுக்குப்பிடி’ விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தனது கணவனை ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து சொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ரேவதி அவரது கள்ளக்காதலன் ஜெயபிரகாஷ், இவரது தம்பி வெங்கடேசன் மற்றும் விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்சூரன்ஸ் தொகைக்காக மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Leave a Reply