BREAKING NEWS

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 2,449 ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, 2 ஆயிரத்து 449 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, பள்ளிகளே, தற்காலிக ஆசிரியர்களை நேரடியாக நியமித்துக்கொள்ள, பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், உயிரியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், இயற்பியல்,பொருளியல் போன்ற முக்கியப் பாடங்களில் 2 ஆயிரத்து 449 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம், அந்தந்த பள்ளிகளுக்கு அருகில் உள்ள தகுதியான பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்து தற்காலிகமாக நியமித்துக் கொள்ள அரசுப்பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

5 மாத பணி

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 5 மாதங்களுக்கு மட்டும் 2 ஆயிரத்து 449 தற்காலிக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை, மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பள்ளிகளே நேரடியாக நியமித்துக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 5 மாதங்களுக்கு தேர்வு செய்யப்படும் 2 ஆயிரத்து 449 ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க 12 கோடியே 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டு உள்ளது.




Leave a Reply