BREAKING NEWS

தமிழ்நாட்டில் அனைவருக்கும் வீடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி சென்னை, பெரம்பூரில் பிரசாரம் 16 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்

தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும். இதற்காக 16 லட்சம் வீடுகள் கட்டும் பணி நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரம்பூரில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது:-

16 லட்சம் வீடுகள்

சென்னையில் பேரிடர் காலங்களில் தங்குதடையின்றி மின்சாரம் கிடைத்திட உரிய நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களுக்கு தேவையான குடிநீர் முறையாக கிடைத்திட அரசு தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பேரூராட்சி, நகராட்சியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுமார் 16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு, தமிழகத்தில் வீடுகள் இல்லாதோர் யாரும் இல்லை என்ற நிலையை நிச்சயமாக ஏற்படுத்தப்படும். ஸ்டாலின் அ.தி.மு.க.வைப் பற்றி தப்புக்கணக்கு போட்டார்.

இந்த ஆட்சி 10 நாட்கள் நீடிக்குமா? ஒரு மாதம் தாக்குப்பிடிக்குமா? என்று சொன்னார். ஆனால், மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகளில், எந்த முதலமைச்சரும் சந்திக்காத போராட்டங்களை சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்து, அதிலும் இந்த அரசு வெற்றி கண்டிருக்கிறது. இது போன்ற போராட்டங்களுக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டது தி.மு.க தான்.

ெகாடநாடு

நான் 42 ஆண்டு காலம் இந்த கட்சிக்கு விசுவாசமாக இருந்துள்ளேன். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, 7 முறை சிறை சென்றுள்ளேன். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, ஜாமின் வாங்கி கொடுத்து வெளியில் கொண்டுவருபவர்கள் தி.மு.க.வினர். இந்த விவகாரத்தில் எனது பெயரை கொலை குற்றத்தில் சேர்க்கச் சொல்லி சதித்திட்டம் திட்டியது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளிவந்துள்ளது. இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம், யார் அந்த கொலையில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள்.

ஸ்டாலினுக்கும், ஆ.ராசவுக்கும் மிக நெருக்கமாக இருந்தவர் சாதிக் பாட்சா. இவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். சாதிக் பாட்சா அவர்களின் மனைவி காரிலே சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்தும் உரிய விசாரனை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகச்சிறப்பாக இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு மிகச்சிறப்பாக இருக்கிறது.

அராஜக தி.மு.க.

சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பின் போது, தி.மு.க. உறுப்பினர்கள் செய்த அராஜகத்தை மக்கள் நன்கு அறிவார்கள். சட்டமன்றம் மிகுந்த கண்ணியத்திற்குரியது. அதை சீர்குலைக்கின்ற வகையில், சபாநாயகரை கீழே தள்ளியும், அவரது மேஜையை அப்புறப்படுத்தியும், முதலமைச்சர், அமைச்சர்கள் மேஜை மீது ஏறிநின்று அநாகரிகமான முறையில் விதிக்கு மாறாக நடந்துகொண்டார்கள். எதிர்கட்சியாக இருக்கும் போதே, இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபடும் தி.மு.கவினர் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தால் எப்படி இருப்பார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என ஜெயலலிதா குறிப்பிட்டார். அவரின் எண்ணங்களை நாங்கள் நிறைவேற்றிக் காட்டுவோம். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் இந்தத் தேர்தலோடு காணாமல் பேய்விடுவார்கள். ஜெயலலிதா ஆட்சியில் சுகாதாரத் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். ஏழை, எளியவருக்கு அரசால் வழங்கப்படுகிற நலத்திட்ட உதவிகளை தடுத்து நிறுத்துவதுதான் தி.மு.கவின் வாடிக்கை.
Leave a Reply