BREAKING NEWS

தமிழிசையை கண்டித்து முற்றுகை போராட்டம், சென்னையில் பா.ஜ.க-பா.ம.க தொண்டர்கள் மோதல் – பேருந்து கண்ணாடி உடைப்பு: 114 பேர் கைது.

பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பா.ம.க.வினருக்கும், பா.ஜ.கவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. 114 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொதுக்கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குறித்து அவதூறு கருத்து கூறினார். இதனால் பா.ம.க.வினர் கடும் கொந்தளிப்பில் இருந்தனர்.

இதை கண்டித்து பா.ம.கா சார்பில் சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தை நேற்று முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து நேற்று பா.ஜ.க அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஊர்வலம்

இந்தநிலையில் நேற்று காலை முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே.மூர்த்தி தலைமையில் பா.ம.க.வினர் பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். இதைபார்த்த போலீசார் பா.ம.கவினரை தடுத்து நிறுத்தினர். பின்னர் கோஷம் மிட்டப்படி முற்றுகையிட முயன்ற பா.ம.க.வினரை போலீசார் வேனில் ஏற்றினர்.

அப்போது பா.ஜ.க அலுவலகத்தில்ருந்து தொண்டர்கள் வெளியே வந்தனர். அவர்களை பார்த்தும் பா.ம.கவினர் தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இந்த சண்டை முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

பாதுகாப்பு

இந்த மோதலின் போது தி.நகரில் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இதைபார்த்த போலீசார்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே. மூர்த்தி உட்பட 144 பேரை போலீசார் கைதுசெய்தனர். மேலும் பா.ஜ.க அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவம் தி.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




Leave a Reply