BREAKING NEWS

“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும் என்று முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று தமிழ் புத்தாண்டை ெகாண்டாடுகின்றனர். இதையடுத்து, தமிழக முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் நேற்று கூட்டாக வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். தமிழக மக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக பன்னெடுங் காலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நன்னாளில் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும், இல்லத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும். இப்புத்தாண்டில் அனைத்து வளமும், நலமும் பெருகும் வகையில் தமிழகத்தை மேலும் உயர்த்திட உறுதியேற்போம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.




Leave a Reply