BREAKING NEWS

தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி:

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றுள்ளார்.

பிரேசிலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து இளவேனில் வளரிவான் சாதனை படைத்துள்ளார். பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. வருகிற 3ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற இளவேனில் வளரிவான், மற்ற வீராங்கனைகளை பின்னுக்கு தள்ளி 251.7 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்த ரியோ டி ஜெனிரோ உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த அபுர்வி சண்டேலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகியோர் மட்டுமே தங்கம் வென்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்த படியாக நடந்த ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை போட்டியில் 251.7 புள்ளிகளுடன் சாதனை படைத்து, இளவேனில் வளர்வான் தங்கம் வென்றுள்ளார்.

பிரிட்டன் வீராங்கனை Seonaid Mcintosh 250.6 புள்ளிகள் எடுத்து வெள்ளிப் பதக்கத்தையும் டைபேய் நாட்டைச் சேர்ந்த Ying- Shin Lin வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர். கடலூரைச் சேர்ந்த இளவேனில் வளரிவான்,கடந்த ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கம் வென்றார். தற்போது சீனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற 3வது இந்தியர் என்ற பெருமையையும் இளவேனில் பெற்றுள்ளார்.




Leave a Reply