BREAKING NEWS

தமிழக மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு `நவம்பர் புரட்சி’ வாழ்த்து

தமிழக மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநிலக்குழு நவம்பர் புரட்சி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இந்திய கம்யூனிஸ்டு வாழ்த்து தமிழக மக்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின நல்வாழ்த்துக்கள்.

வரலாற்றில் அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சி எனப் புகழப்படும் லெனின் தலைமையில் நடந்தேறிய ரஷ்யப் புரட்சி, காலமாற்றத்தால் நவம்பர் புரட்சி என அழைக்கப்படுகிறது. ரஷ்யப் புரட்சி ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலையை ஆதரித்து நின்றது. பாசிசத்தை வீழ்த்த 2 கோடிக்கும் அதிகமான மக்களை பலிகொடுத்து நீடித்த அமைதியை நிலைபெற செய்தது.

நிதிமூலதன சக்திகளின் ஆதிக்கத்தில் அரசமைப்புகள் சிக்கிக் கொண்டிருப்பதும், வலதுசாரி, வகுப்புவாத சக்திகளின் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், அடக்கு முறைகள் அதிகரித்திருப்பதுமான சூழலில், சமத்துவ கருத்துக்களையும், அறிவியல் கண்ணோட்டத்தையும் பரப்புரை செய்யவும், நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் உயரிய நோக்கங்களை நிறைவேற்றவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மகத்தான மரபுகளை முன்னெடுத்துச் செல்லவும், நவம்பர் புரட்சி தினத்தில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் புரட்சிதின வாழ்த்துகள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *