BREAKING NEWS

தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் –  மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.



 

அரசின் உரிமை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிதாவது:

தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். அவர், மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது கண்டிக்கத்தக்கது. பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் ஆளுநர் மற்றும் அவர் அலுவலகம் சம்பந்தப்பட்டு இருப்பதால் அவர் விசாரணை ஆணையம் அமைப்பதற்கு தகுதி இல்லை.

ஆளுநரை தகுதி நீக்கம் செய்யவில்லை என்றால் அனைத்து கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டியது வரும். சேலம் 8 வழிச்சாலை தேவையற்றது, ஏற்கனவே உள்ள 4 வழிச்சாலையே போதும், சாலைக்காக நிலம் எடுக்கக்கூடாது என்று போராடுபவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வது கண்டிக்கதக்கது.

வன்கொடுமை

முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவை கைது செய்து கேவலமாக நடத்திய டி.எஸ்.பி சுந்தரமூர்த்தியை கைது செய்யக் கோரி ஜூன் 30-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை உச்சநீதிமன்றம் நீர்த்து போகும் வகையில் ஒரு தீர்ப்பு கொடுத்து இருப்பதால் மத்திய அரசு ஒரு சிறப்பு அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 2-ந் தேதி ெரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. ஜூலை 3-ந் தேதி பெண்கள் பாதுகாப்பு மாநாடு சேலத்தில் நடக்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply