BREAKING NEWS

தமிழக அரசியலின் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் கராத்தே தியாகராஜன் பேட்டி

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ரஜினி மக்கள் மன்றம்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் தனிக்கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதையடுத்து, அவருக்கு பலத்த வரவேற்பும், எதிர்ப்பும் உண்டானது. இதையடுத்து, அவரது மக்கள் மன்றத்தின் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், சென்னை, ஆலந்தூரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நேற்று மரம் நடும் விழா நடைபெற்றது. இதில், காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

வெற்றிடத்தை நிரப்புவார்

ரஜினிகாந்த் ஒரு வாக்கு கொடுத்தால், அதை மீறமாட்டார். 2017-ல் தனியாகக் கட்சி தொடங்குவேன் என்றார். அவர் கூறியதுபோல, விரைவில் கட்சியைப் பதிவு செய்வார். தமிழ்நாட்டின் வாக்கு சதவீதமே, சுனாமி போல மாறிவிடும். ரஜினியின் கட்சி பெரிய கட்சியாக விஸ்வரூபம் எடுக்கும். அடுத்தாண்டு, ரஜினியின் பிறந்த நாள் இதைவிட பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார்.

ஸ்டாலின் பரிசோதனை

கடந்த செப். 15-ம் தேதி நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் வைகோ பேசினார். அப்போது தமிழ்நாட்டில் 99 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ரஜினி சொன்னதைப் போல செயல்பட வேண்டும் என்று ஆன்மிக அரசியல் குறித்துப் பேசினார். ரஜினியின் ஆன்மிக அரசியல் பாணியை வைகோவை வைத்து ஸ்டாலின் பரிசோதித்துப் பார்க்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *