BREAKING NEWS

தமிழகம் முழுவதும் 14 புதிய பாலங்கள் திறப்பு ரூ.35 ேகாடியே 19 லட்சம் மதிப்பிலான

ரூ.35 கோடியே 19 லட்சம் மதிப்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட 14 புதிய பாலங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

14 பாலங்கள்

மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நாமக்கல், எருமப்பட்டியில் 1 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பச்சாம்பாளையத்தில் 1 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஈரோடு, பெரளிமேட்டில் 1 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருப்பூர், கருக்கம்பாளையத்தில் 4 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மற்றும் பொள்ளாச்சி- –தாராபுரம்-கரூர் சாலையில் மில்கேட்டில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கரூர், மேட்டூரில் 1 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கோவை, சென்னம்பாளையத்தில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், வெள்ளலூரில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம்.

35 கோடி

திருச்சி, கூழையாற்றின் குறுக்கே 7 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திண்டுக்கல், ஜங்கால்பட்டியில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தூத்துக்குடி, வேலிடுபட்டியில் 1 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கோட்டூரில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் பேரூரணியில் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தருமபுரி, அம்மாணிமல்லாபுரத்தில் சின்னாற்றின் குறுக்கே 4 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 35 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள

14 பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், ஈரோடு, பவானியாற்றின் குறுக்கே 7 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உயர்மட்டப் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், சென்னை எல்லைச் சாலை திட்டத்திற்கான நிலயெடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 5 ஜீப்புகளை வழங்கிடும் விதமாக, அவ்வாகனங்களின் சாவிகளை அவ்வலுவலர்களுக்கு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் உடனிந்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *