BREAKING NEWS

தமிழகம், கர்நாடகம் உள்பட 4 மாநில நதிநீர் பங்கீட்டுக்காக நாளை காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் – கர்நாடக அரசு தண்ணீரை திறக்க தமிழக அரசு வலியுறுத்தும்.

 

 

தமிழகம், கர்நாடகம் உள்பட 4 மாநில நதிநீர் பங்கீட்டுக்காக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு தண்ணீரை திறக்க தமிழக அரசு வலியுறுத்தும் என்று எதர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாள் போராட்டம்

தமிழகத்தில் டெல்டா பகுதி மக்கள் விவசாயம் செய்ய காவிரி நீர் பெற பல ஆண்டுகளாக தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும் பல நிலைகளில், போராட்டங்களை நடத்தி வந்தன. குறிப்பாக தமிழக விவசாயிகளின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு முதல் -அமைச்சர் காவிரி நீரை பெற பல நிலைகளில் முயற்சிகளை மேற்கொண்டார்.

அதன்படி தமிழக அரசு மேற்கொண்ட சட்டப்போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது. அதன் விளைவாக, தமிழக அரசு நீண்ட நாட்களாக வைத்து வந்த கோரிக்கையான காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட 2 அமைப்புகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் கோயல், காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு, ஆணையத்தின் உறுப்பிர்களையும், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்கள் நியமனம் செய்துள்ளது.

முதல்வர் ஆலோசனை

இந்த நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நீர்வளத்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அழைப்பு

இந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் 4 மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

எவ்வளவு தண்ணீர் திறப்பு?

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் எவ்வளவு தண்ணீர் எந்த தேதியில் திறக்கப்பட வேண்டும் என்று முடிவு வெளியாகும்.

தமிழக பிரதிநிதியான பொதுப்பணி முதன்மை செயலாளர் பிரபாகர் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் பல விஷயங்களை வலியுறுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் போலவே கர்நாடக அரசு தொடர்ந்து தண்ணீரை திறக்க ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த உள்ளது. காவிரி ஆணையத்திற்கு எதிராக கர்நாடகா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளது பற்றியும் முறையிட முடிவு செய்துள்ளது.

ஜூலை-ஆகஸ்ட்டில் 80 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறக்க தமிழக பிரதிநிதி வலியுறுத்த முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு 11 டி.எம்.சி. நீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply