தற்போதைய செய்திகள்

தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து-டெல்டா மாவட்டங்களில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்….

சென்னை,

காவிரி பிரச்சினையில் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் வெடித்தது.
காவிரி பிரச்சினை
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், புதுவை, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்நிலையில் காவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16-ந் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இதில் காவிரி நீரை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. கர்நாடக மாநில தேர்தலுக்காக மக்களை பகைத்து கொள்ள விரும்பாத மத்திய அரசு, காவிரி மேற்பார்வை குழுவை ஏற்படுத்த திட்டமிட்டது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு நேற்று முடிவடைந்தது. ஆனால் காவிரி விவகாத்தில் எந்த ஒரு முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
முதல்-அமைச்சர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் போட்டு அந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பினார். பிரதமரை சந்திக்க நேரம் கோரினார், கர்நாடக முதல்-அமைச்சருக்கம் கடிதம் எழுதினார். நாடாளுமன்றத்திலும் எம்.பி.கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.
நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பேசிய நவநீதிகிருஷ்ணன் எம்.பி, ‘ காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் அ.தி.மு.க எம்.பி.க்களாகிய நாங்கள் ராஜினாமா செய்வதற்கு பதில் தற்கொலைதான் செய்து கொள்வோம்’ என்று ஆவேசமாக கூறினார். ஆனால் எத்தகைய அழுத்ததிற்கும் மத்திய அரசின் மனம் இறங்கவில்லை.
விவசாயிகள்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உச்ச நீதிமன்ற கெடு முடிந்த நிலையில் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணத மத்திய அரசை கண்டித்து நேற்று தஞ்சாவூரில் ஆற்றுப்பாலம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நேற்று தொடங்கியது. தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வழக்கு தாக்கல்

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் மத்திய அரசைக் கண்டித்து மரத்தில் தூக்கு மாட்டி போராட்டம் நடத்தினர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அங்கிருந்த 6 விவசாயிகளைக் கைது செய்தனர்.

தஞ்்சை, திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் விவசாயிகள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களை நடத்தினார்கள். விவசாயிகள் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நெல்லை. திண்டுக்கல் போன்ற பகுதியில் தமிழ் தேசிய கட்சியினர் செல்போனர் டவர்களில் ஏறி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். போலீசார் உடனடியாக விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். இதே போல் தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் தொடர்ந் போராட்டங்கள் வெடித்து வருகிறது.
Leave a Reply