BREAKING NEWS

தமிழகத்தில் 95 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 

 

நிதி நிலை அறிக்கை

2018-19-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக 5 அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணைகள் வெளியிடப்பட்டது.

மேலும் எஞ்சியுள்ள 95 அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி உள்ளதாக தற்போது தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கட்டமைப்பு

மேலும் பள்ளிகளில் தரம் உயர்த்தப்படும் போது 1:40 என்ற ஆசிரியர்- மாணவர் விகிதம் பின்பற்ற வேண்டும். தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு கூடுதல் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட வேண்டும். மேலும், அதை பள்ளிக் கல்வி இயக்குநர் உறுதி செய்ய வேண்டும்.

புதிய மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியின் தலைமை அலுவலராக கருதப்படுவார். அவர்கள் அளிக்கப்படும் சம்பளம் மற்றும் இதர செலவிற்கான பட்டியல்கள் சரியாக இருக்கும் நிலையில் ஏற்றுக் கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட கருவூல அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.




Leave a Reply