தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து-கென்யா கவர்னர் முதல்வருடன் ஆலோசனை…..

சென்னை,

தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கென்யா நாட்டிலுள்ள நரோக் கவுண்டி, கவர்னர் சாமுவேல் டுனாய் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

முதல்வருடன் சந்திப்பு

அமெரிக்க, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தமிழகத்தில் கார் உற்பத்தி உள்ளிட்ட தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், வெளிநாட்டு முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டுவர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னொரு பக்கம், அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையும் தமிழக அரசு நடத்தவுள்ளது.
இந்நிலையில், கென்யா நாட்டின் நரோக் கவுண்டி, கவர்னர் கே.சாமுவேல் டுனாய் நேற்று சென்னை கோட்டைக்கு வந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து அவர் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின் போது, நரோக் கவுண்டி அரசின் பொருளாதார சிறப்பு ஆலோசகர் மகேஷ் புனியா, அரசு ஆலோசகர் ஜூலியஸ் கே.கேம்பாய், அரசு அலுவலக இயக்குனர் அந்தோணி கே.காம்வாரோ உள்ளிட்ட அதிகாரிகள், தமிழக அரசு நித்துறைத்துறை கூடுதல் தலைமைச் சண்முகம், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் துணை செயல் தலைவர் எம்.வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Leave a Reply