BREAKING NEWS

தமிழகத்தில் புதிதாக 1932 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் –  அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

 

 

ஜெயலலிதா வழியில்

ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: ஜெயலலிதா வழியில் நடைபெறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொண்டு வருகிறது.

பள்ளிகளில் காலியாக உள்ள 1932 பணியிடங்களை பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப உத்தரவு போடப்பட்டுள்ளது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பரிந்துரை

ஊதியத்தை நிர்ணயிக்க தணிக்கைத் துறை இயக்குனர் பரிந்துரைப்படி ஒரு பள்ளியில் இத்தனை மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற விதிமுறையை கணக்கில் கொண்டு நீதித்துறை பரிந்துரை ஆகிய விவரங்கள் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்




Leave a Reply