BREAKING NEWS

தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு வாய்ப்பு இல்லை – திருநாவுக்கரசர் பேட்டி.


 

 

பா.ஜனதாவுக்கு தமிழகத்தில் வாய்ப்பு இல்லை என்று காங்கயத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

கலந்தாய்வு

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு மூன்றாவதாக மூத்தநீதிபதி ஒருவரை நியமித்து தற்போது வழக்கு விசாரணை தொடங்கி இருப்பது நல்லது. தற்போது சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரத்தில் மக்கள் போராடி வருகிறார்கள். மக்கள் விருப்பத்திற்கு எதிராக திட்டத்தை நிறைவேற்ற அரசு முயற்சி செய்யக்கூடாது.

கனவில் மிதக்கிறனர்

பா.ஜனதாவுக்கு தமிழகத்தில் வாய்ப்பு இல்லை. எனவே மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை செயல்படுத்தாமல் தமிழக மக்களை தொல்லைகளுக்கு உள்ளாக்கும் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து விட்டதாக கனவுலகில் மிதந்து வருகிறது. தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். காங்கயத்தில் இரும்பு தாது எடுக்கும் விவகாரத்தில் மக்கள் பக்கம் காங்கிரஸ் நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply