BREAKING NEWS

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலின்போது, காங்கிரஸ் யாருடன் கூட்டணி என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.



 

நாடாளுமன்ற தேர்தல்

நாடு முழுவதும் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், பா.ஜ.க.வும், காங்கிரசும் தங்களது கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணியை விட்டு வந்தால், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார் என்று தினகரனும், பா.ம.க. நிறுவனர் ராமதாசும் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

மேலும், நடிகரும் மக்கள் நீதிமய்ய நிறுவனர் கமல்ஹாசனும் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பீர்களா? என்ற கேள்விக்கு, அரசியலில் எதுவும் சாத்தியமே என்று பதிலளித்தார். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

யாருடன் கூட்டணி

அ.ம.மு.க. துணைப்பொதுச் செயலாளர் தினகரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால், நாங்கள் ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என கூறினார். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், தி.மு.க.வுடனான எங்கள் கூட்டணி பலமாகவும், உயிரிப்புடனும் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி வேறு எந்த கூட்டணிக்கும் காங்கிரசில் இடமில்லை என்று கருதுகிறேன் என தெரிவித்தார்.




Leave a Reply