தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் நடைபெறும்-அ.தி.மு.க. உண்ணாவிரதம் மாபெரும் வெற்றி பெறும் துணை முதல்-அமைச்சர் ஓபனீர்செல்வம் பேட்டி….

செங்குன்றம்,
தமிழகத்தில்  நடைபெறும் அ.தி.மு.க. உண்ணாவிரதம் மாபெரும் வெற்றி பெறும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை மாதவரத்தில் பேருந்து நிலைய பேணியை பார்வையிட வந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பதி பேருந்துகள்
மறைந்த முதலமைச்சர் 2011ம் ஆண்டில் மாதவரத்தில் இருந்து ஆந்திர மாநிலம் ஐதராபாத், திருப்பதி, நல்லூர் செல்லும் பேருந்துகளை தனியாக ஒரு பேருந்து நிலையம் மாதவரத்தில் கட்டப்படும் என்று அறிவித்தார். இதன்மூலமாக கோயம்பேட்டில் பஸ் நிலையத்தில் ஏற்படும் இடநெருக்கடியை குறைப்பதற்கு வழிவகுக்கும் வகையில் ரூ. 95 கோடி மதிப்பிலான திட்டத்தில் அடுக்குமாடி பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.

2016ம் ஆண்டு தொடங்கி மாதவரம் பஸ் நிலையம் கட்டும் பணி துவக்கப்பட்டு இன்றைக்கு முடிவடைகின்ற தருவாயில் உள்ளது. புதிய பேருந்து நிலையம் இன்னும் ஓரிரு மாதங்களில் திறக்கப்பட்டு பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அறப்போராட்டம்

இந்த பேருந்து நிலையம் மூலமாக ஆந்திர செல்கின்ற 42 பேருந்துகள் இங்கிருந்தும் இயக்கப்படும். 9 மாநகர பேருந்துகள் நிற்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. மாடியில் கிட்டத்தட்ட 50 ஐடியல் பேருந்துகள் நிற்பதற்கு இடவசதி அளிக்கப்பட்டிருக்கிறது.

காவேரி மேலாண்மை அமைப்பதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார் என்பது மக்கள் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். உச்சநீதிமன்றம் தீர்ப்பில் 6 வாரத்திற்கு காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என தீர்ப்பளித்தும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை.

காவேரி மேலாண்மை அமைக்கக்கோரி நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்பி.க்கள் 23 நாட்கள் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடக்கி வைத்திருக்கிறார்கள். இதையடுத்து அடுத்த கட்டமாக அ.தி.மு.க. சார்பாக நாளை (இன்று) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும்.

வெற்றி அடையும்

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.தி.மு.க.வினரும் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்வார்கள். இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாபெரும் வெற்றி அடையும் என தெரிவித்தார்.

இவ்வாறு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

துணை முதலமைச்சருடன் சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் ராஜேஷ்லக்கானி, ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், எம்எல்ஏ.க்கள் வி.அலெக்சாண்டர், சிறுணியம் பி.பலராமன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக புறநகர் மாதவரத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக கட்டப்படும் அடுக்குமாடி பேருந்து நிலையத்தை துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

போக்குவரத்து நெரிசல்

சென்னை கோயம்பேட்டிலிருந்து தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுவதால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.

இதனால் மாதவரம் அருகில் சுமார் 80ஏக்கர் பரப்பளவில் தமிழகத்தில் முதல் முறையாக அடுக்குதளம் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 95 கோடி ரூபாய் நீதி ஒதுக்கப்பட்டு அடுக்குதளம் பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் கடந்த 2016ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது இந்த அடுக்குமாடி பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் நேற்று தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கட்டிட பணி நடக்கும் பேருந்து நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பொதுமக்களுக்கான வசதிகள் குறித்து சிஎம்டிஏ. அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.
Leave a Reply