தற்போதைய செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியிலிருக்கும்போது-உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்துக்கு ரூபாய் 3 லட்சம் நிதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…..

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, உடல்நலக்குறைவு மற்றும் சாலை விபத்தில் உயிரிழந்த 12 காவலர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 3 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் நேற்று வௌியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

உடல்நலக்குறைவு
சென்னை, உயர்நீதிமன்ற காவல்நிலைய தலைமைக் காவலராகப் பணிபுரிந்த ஷர்மிளா, வேலூர், திருப்பத்தூர் காவல்நிலைய தலைமைக் காவலராகப் பணிபுரிந்த ஏ. வேங்கையன், தூத்துக்குடி, ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்த விஜயகுமார், திருச்சி, அரசு மருத்துவமனை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ராஜசேகர்,

12 பேர் மறைவு

திருநெல்வேலி, டவுண் போக்குவரத்து தலைமைக் காவலராகப் பணிபுரிந்த சுப்பிரமணியன், கோயம்புத்தூர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த திருமூர்த்தி,
காஞ்சிபுரம், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த கணபதி, ெசன்னை, பீர்க்கன்காரணை காவல்நிலைய தலைமைக் காவலராகப் பணிபுரிந்த ஜெயசங்கர்,

3 லட்சம் நிதி

திருவண்ணாமலை, போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ஷேக் தாவூத், வேலூர், ஜோலார்பேட்டை காவல் நிலைய முதல் நிலைக்காவலராகப் பணிபுரிந்த ஜெயக்குமார், திருப்பூர், குன்னத்தூர் காவல்நிலைய காவலராகப் பணிபுரிந்த முத்துவீரபாண்டியன், கோயம்புத்தூர், ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த முத்துபழனியப்பன் ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன். உயிரிழந்த 12 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Leave a Reply