தற்போதைய செய்திகள்
tamil

தமிழகத்தின் நலனில் அக்கறை இருக்குமானால் காவிரி நீரை திறக்க சித்தராமையாவுக்கு உத்தரவிடலாமே? ராகுல்காந்திக்கு தமிழிசை கேள்வி….

சென்னை,
தமிழக விவசாயிகளின் நலனில் உண்மையிலே காங்கிரசுக்கு அக்கறை இருக்குமானால், காவிரி நீரை திறந்துவிட அந்த மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு உத்தரவிடலாமே என்று ராகுல்காந்திக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் பேசிய கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மத்தியில் ஆளும் பா.ஜ.க. மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இதுதொடர்பாக, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரரராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தி திணிப்பு போராட்டம்

ராகுல்காந்தி தமிழ் மக்கள் மீது பிற மொழியை பா.ஜ.க. திணிக்கிறது என்கிறார். தமிழகத்தில், காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்தி திணிப்பை எதிர்த்து இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சிக்கு தமிழகத்தில் கல்லறை கட்டியது இந்தி எதிர்ப்பு போராட்டம்.

தற்போதைய மோடி அரசு இந்தியை திணிக்கவில்லை. இந்தியை மத்திய அரசு நிர்வாகத்தில் அதிக அளவில் பயன்படுத்த ஊக்குவிக்கும் முடிவை எடுத்தது ப.சிதம்பரம் தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழுதான்.

கர்நாடகாவுக்கு உத்தரவிடலாமே?

பிராந்திய மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று தான் மோடி அரசு செயல்படுகிறது. மன்மோகன்சிங்கை வெறும் பொம்மையாக முன்னிறுத்தி, இந்தியாவை ஆண்டது ராகுல்காந்தியின் குடும்பம் தான். நீங்கள் தான் முந்தய ஐக்கிய முன்னணி அரசின் பல முக்கிய முடிவுகளை எடுத்தீர்கள் என்று காங்கிரசின் முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் குற்றம் சாட்டியது உங்களை தானே.

தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவுக்கு உத்தரவிட்டு தமிழகத்திற்கு உதவலாமே? 60 ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்த, நீங்கள் தான் நாட்டின் விவசாயிகளின் அவலத்திற்கும், இளைஞர்களின் ஏமாற்றத்திற்கும் மூல காரணம். 60 ஆண்டு அவலத்தை 4 ஆண்டுகளில் சரிசெய்ய முடியுமா?

கொச்சைப்படுத்த வேண்டும்

பொதுமக்களுக்கு கழிப்பிட வசதிகூட மோடி அரசு வந்த பின்பு தான் முழுவதும் கிடைத்தது. மக்களின் ஏகோபித்த ஜனநாயக உணர்வுகளை, வாக்குச்சீட்டு எந்திர மோசடி என்று கொச்சைப்படுத்தாதீர்கள். அம்பானியும், அதானியும் கோடீஸ்வரர்களானது உங்கள் 60 ஆண்டுகளில் தான்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply