BREAKING NEWS

தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் – மு.க.ஸ்டாலின் கருத்து.

 

உச்சநீதிமன்ற தீர்ப்பு

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில அரசுக்கும், அந்த மாநில துணை ஆளுநருக்கும் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர்கூட, அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுநர் மாளிகையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு ெதரிவித்துள்ளார்.

புரிந்து கொள்ள வேண்டும்

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் நடக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இதனை முழு அதிகாரம் படைத்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும், குறிப்பாக தமிழக ஆளுநர் இதனை நன்கு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். தமிழக ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதற்கு, தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply