BREAKING NEWS

தனியார் வேலைவாய்ப்பு முகாம் 1-ந் தேதி நடக்கிறது – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

சென்னை தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு முகாம் வரும் 1-ந் தேதி நடக்க உள்ளதாக சென்னை ஆட்சியர் அன்புசெல்வன் தெரிவித்து உள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தனியார் பணி

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்வதற்காக வரும் 1.6.2018 அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில், 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு , 12-ம் வகுப்பு , ஐ.டி.ஐ, டிப்ளோமா, மற்றும் பட்டப்படிப்பு வரை படித்த அனைத்து வேலை வேண்டுபவர்கள் பங்கேற்கலாம்.

ஆதார் அட்டை

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது கல்விச்சான்றுகள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் அன்றைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும்.

இப்பணியமர்த்தல் சேவையானது முற்றிலும் இலவசமாக நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.




Leave a Reply