தற்போதைய செய்திகள்
xtamilnadu-government-introduces-new-uniform-for-students-from-9th-to-12th-standard-1523092710.jpg.pagespeed.ic.LdpzUJodHu

தனியார் பள்ளிகளுக்கு நிகராக -அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை அறிமுகம்..

சென்னை
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய சீருடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சாம்பல், இளஞ்சிவப்பு நிறத்திலும் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கு கரு நீலத்திலும் சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய சீருடை
தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் மாணவர்களின் சீருடைகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றம் செய்து வருகிறது. பாடத்திட்டங்கள் மாற்றம் செய்தோடு நின்றுவிடாமல் அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடையிலும் அரசு மாற்றம் செய்ய முடிவு செய்தது.
இதன்படி 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, சாம்பல் நிறத்தில் முழுகால்சட்டையும், இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்ட மேல் சட்டையும் அணிய வேண்டும். மாணவிகள் கூடுதலாக சாம்பல் நிற மேல்கோட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, சாம்பல் நிறத்தில் முழுகால்சட்டையும், இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்ட மேல் சட்டையும் அணிய வேண்டும். மாணவிகள் கூடுதலாக சாம்பல் நிற மேல்போட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை
பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் கரு நீல முழுக்கால் சட்டையும், கருநீலக் கோடிட்ட மேல் சட்டையும் அணி வேண்டும். மாணவிகள் கூடுதலாக கருநீலக் கோடிட்ட மேல் கோட்டும் அணிய வேண்டும். மாணவர்கள் தங்கள் சொந்த செலவிலேயே இந்த புதிய சீருடைகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இலவச சீருடையில் எந்த மாற்றமும் இல்லை. புதிய சீருடைகள் குறித்த சுற்றறிக்கை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply