BREAKING NEWS

தனியார் பள்ளிகளில்நீட் தேர்வு பயிற்சிக்கு தடை – அரசு அதிரடி உத்தரவு .


 

வணிக நோக்கமுள்ள நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி, தனியார் பள்ளிகளில் அளிக்கக் கூடாது என மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சில தனியார் பள்ளிகளில் வணிக் நோக்கமுள்ள நிறுவனங்கள் மூலம் ஐஐடி-ஜெஇஇ, நீட் தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தகூடாது.

மேலும், பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கள் நடத்த கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. நீட் தேர்வு பயிற்சியில் சேர மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. பள்ளி நேரங்களில் பாடங்களை மட்டுமே நடத்த வேண்டும். அதைவிடுத்து, நீட் போன்ற பயிற்சிகள் அளிக்கக் கூடாது. தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் தவிர வேறு கட்டணங்கள் எதுவும் வசூலிக்கக்கூடாது. இதையெல்லாம் மீறி செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply