BREAKING NEWS

தனது பிறந்த நாளான நவ. 7-ந்தேதி பிரசாரம் தொடங்குகிறார்

2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக கமல்ஹாசன் தனது பிறந்தநாளான நவம்பர் 7-ந்தேதி முதல் கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார்.கிராமபுறங்களில் கவனம்நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் அவர் சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றார்.மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் குறைவாக இருந்தாலும் கூட சில தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகள் கிடைத்தன. 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்தன.

11 தொகுதிகளில் 3வது இடம் பெற்றது. இது கமல்ஹாசனுக்கும் அவரது கட்சியினருக்கும் உற்சாகத்தை அளித்தது.அடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் அரசியல் வியூகம் அமைத்து வருகிறார். மக்கள் நீதி மய்யத்துக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப்புறங்களில் ஆதரவு இல்லை. இதனால் கட்சிக்கு சரியான நிர்வாகிகளை தமிழகம் முழுக்க நியமிக்கவும் தொடர்ந்து கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளார். பிரசாந்த் கிஷோர் ஆலோசனைதமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள கட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கு நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து முதல்கட்ட ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் வழங்கினார். அவரது ஆலோசனைப்படி கட்சியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. கமல் வரும் நவம்பர் 7-ந்தேதி 65-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். வழக்கமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் கமல், இந்த முறை பெரிய விழாவுக்கு திட்டமிட்டுள்ளதாக அவரது கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த பிறந்தநாள் விழாவிலேயே கமல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *