BREAKING NEWS

தடுமாறாத டிக் டிக் டிக்!


நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்து வெளியான டிக் டிக் டிக் வசூலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இமான் இசையில் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி இருக்கும் டிக் டிக் டிக் சினிமா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரையரங்குகளுக்குப் படம் பார்க்க வருவோர் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் ரஜினி நடிப்பில் வெளியான காலா திரையரங்கில் தொடர முடியாமல் முடங்கியது.இந்த சூழலில் டிக் டிக் டிக் கோவை ஏரியா தவிர்த்து அனைத்து ஏரியாக்களும் அவுட் ரேட் முறையில் வியாபாரம் முடிந்து வெளியானது. ஆர்ப்பாட்டமான ஓபனிங் இல்லை என்றாலும் நியாயமான வசூல் இருந்தது. குடும்பத்துடன் பார்க்க கூடிய படங்கள் குறைந்து வரும் நிலையில் இரும்புத்திரை படத்திற்கு பின் எல்லோரும் பார்க்க கூடிய விண்வெளி விஞ்ஞான படமாக இருக்கிறது.

முதல் நாள் ஓபனிங் குறைவாக இருந்தாலும் குடும்பத்துடன் படம் பார்க்கும் கூட்டம் அடுத்தடுத்த நாட்களில் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறுகின்றனர் தியேட்டர் வட்டாரத்தில். முதல் நாள் தமிழ் நாடு முழுவதும் சுமார் 3 கோடி 96 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. அடுத்துவரும் நாட்களில் கூடுதல் வசூல் இருக்கும் என்கிறது விநியோகஸ்தர்கள் தரப்பு.




Leave a Reply