BREAKING NEWS

தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.28,856க்கு விற்பனையாகிறது.

கடந்த 1ந் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. உச்சக்கட்டமாக கடந்த 13ந் தேதி பவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு பவுன் தங்கம் ரூ. 29 ஆயிரத்து 16 ஆக இருந்தது.

பின்னர் விலை குறைந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. நேற்று முந்தினம் பவுனுக்கு ரூ. 280 குறைந்து ரூ. 28 ஆயிரத்து 664 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ. 192 உயர்ந்துள்ளது.

ஒரு பவுன் ரூ. 28 ஆயிரத்து 856 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ. 24 ஆதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 3,607க்கு விற்கிறது.

தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி கிலோவுக்கு ரூ. 100 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 47 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 47.90க்கு விற்கிறது.

 




Leave a Reply