BREAKING NEWS

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 664 ரூபாய் குறைந்தது

தங்கம் விலை கணிசமாக உயர்ந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு 664 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக படிப்படியாக உயர்ந்து வந்தது. பவுனுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத வகையில் பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டது. எனினும் அன்று மாலையே விலை சற்று குறைந்தது.

நேற்று முன் தினம் காலையில் ரூ.30 ஆயிரத்தை தாண்டியிருந்த நிலையில், மாலையில் சற்று குறைந்து ஒரு கிராம் ரூ.3741-க்கும், ஒரு பவுன் ரூ.29,928-க்கும் விற்பனையானது.

ரூ.664 குறைப்பு

இந்நிலையில் நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தேக தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது. காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.3700 ஆக இருந்தது. இதனால் ஒரு பவுன் விலை ரூ.328 குறைந்து ரூ.29,600-க்கு விற்பனையானது.

அதன்பின்னர் பிற்பகல் வர்த்தகத்தின்போதும் தங்கம் விலை மேலும் குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.336 குறைந்து, ஒரு சவரன் ரூ.29,264-க்கும் விற்பனை. ஒரு கிராம் ரூ.3,658-க்கு விற்பனை ஆனது. இதன்மூலம் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.664 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply