BREAKING NEWS

டொயோட்டா நிறுவனம் தனது யாரீஸ் என்ற செடன் ரக காரை நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனையானது.

மும்பை, மே 18-

டொயோட்டா நிறுவனம் தனது யாரீஸ் என்ற செடன் ரக காரை நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனையானது.

செடன் ரக கார்

டொயோட்டா நிறுவனம் யாரீஸ் என்ற தனது புதிய செடன் ரக காரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இந்த காரின் விலை கடந்த மாதம் புக்கிங் துவங்கும் போதே வெளியானது. தொடர்ந்து புக்கிங் நடந்து வந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் அதன் விற்பனை தொடங்கியது.

முதல் நாளான நேற்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு டீலர்கள் மூலம் சுமார் 1,000 கார்களை டெலிவரி செய்யப்படுகிறது. இந்த கார் 4 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஜே, ஜி, வி, மற்றும் விஎக்ஸ் ஆகிய வேரியண்ட்களில் மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ்களுடன் விற்பனை வந்துள்ளது. இந்த பேசிக் வேரியன்ட் ரூ 8.75 லட்சத்தில் இருந்து டாப் வேரியன்ட் ரூ 14.07 லட்சம் வரை விற்பனையாகிறது. டொயோட்டா யாரீஸ் காரின் இன்ஜினை பொறுத்தவரை 1.5 லிட்டர் டுயல் விவிடி-ஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

சிவிடி கியர்பாக்ஸ்

இது 108 பிஎச்பி பவரையும் 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், அல்லது 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. அனைத்து வேரியன்ட்களிலும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. மைலேஜ் டொயோட்டா யாரீஸ் மேனுவல் கியர் பாக்ஸ் வேரியன்டில் 17.1 கி.மீ. மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் வேரியண்ட்டில் 17.8 கி.மீ. மைலேஜ் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அம்சம்

மற்றொரு முக்கிய அம்சமாக யாரீஸ் காரில் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், பவர் டிரைவர் சீட், ரூப் மவுண்டட் ஏசி, அம்பியண்ட்ன லைட்டிங், புரேஜக்டர் ஹெட்லைட், க்ரூஸ் கண்ட்ரோல், லேதர் சீட் அப்ஹோல்சரி, ரியர் ஆர்ம் ரெஸ்ட், கீ லெஸ் என்ட்ரி, ரெயின் சென்சிங் வைப்பர், ஸ்கார்க் பின் ஆன்டனா, பின் பக்கம் 60: 40 என பிரிக்கப்பட்ட சீட் ஆகிய வசதிகளும் உள்ளது.

பாதுகாப்பும் அம்சம் டொயோட்டா யாரீஸ் காரன் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 7 ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் வசதியும் இதில் உள்ளது. இதன் டாப் என்ட் மாடலில் ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன்பக்கம், பின்பக்க பார்க்கிங் சென்சார், பின் பக்க கேமரா, சென்ரல் லாக்கிங் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள்இந்தகாரில் கொடுக்கப்பட்டுள்ளன.

அதிக வசதி

இந்திய மார்கெட்டில் டொயோட்டா நிறுவனத்தின் முதல் சி செக்மெண்ட் காராக இந்த கார் வெளியாகியுள்ளது. இந்த ரக காரில் யாரீஸ் காரில் தான் அதிகளிவில் வசதிகளும் அம்சங்களும் நிறைந்துள்ளது. ரூ10 லட்சத்திற்கு குறைவான கார்களில் சிவிடி கியர் பாக்ஸ்களுடன் கூடிய கார் இது தான்.




Leave a Reply