BREAKING NEWS

டூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் ஆக்டாகோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இங்குதளம் மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ10எஸ் பேஸ் அன்லாக் வசதியும் கொண்டிருக்கிறது. இத்துடன் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சிறப்பம்சங்கள்:

6.2 இன்ச் 1520X720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே

ஆக்டா-கோர் எக்சைனோஸ் பிராசஸர்

2 ஜி.பி. ரேம்

32 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.

டூயல் சிம் ஸ்லாட்

13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், f/1.8

2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4

8 எம்.பி. செல்பி கேமரா, f/2.0

கைரேகை சென்சார்

3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் புளு, கிரீன், ரெட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.




Leave a Reply