BREAKING NEWS

டி20 உலகக் கோப்பை: நமிபியா, நெதர்லாந்து அணிகள் தகுதி

ஆஸ்திரேலியாவில் 2020ம் ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு முதல் முறையாக நமீபியா அணி தகுதி பெற்றுள்ளது. அதோடு சேர்ந்து நெதர்லாந்து அணியும் தகுதிச்சுற்று மூலம் நுழைந்துள்ளது.ஆஸ்திரேலியாவில் 2020ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதிவரை டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கின்றன. இதில் நேரடியாக போட்டியை நடத்தும் ஆஸ்திரேலயா அணி தகுதிபெற்றுள்ளது.

இதுதவிர 2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிவரை டி20 தரவரிசையில் முதல் 9 இடங்களில் இருந்த பாகிஸ்தான், இந்தியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் நேரடியாக தகுதிபெறும். தகுதிச்சுற்று மூலம் 6 அணிகள் தகுதிபெறும்.தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தன. இதில் நடந்த ஆட்டத்தில் நமிபியா அணியும், நெதர்லாந்து அணியும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் வென்று உலகக் கோப்பைக்கையில் இடம் பிடித்துள்ளன.

துபாயில் நமிபியா அணியை எதிர்த்து ஓமன் அணி மோதியது. இதில் முதலில் பேட் செய்த நமிபியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி 19.1 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்து.இதையடுத்து, டி20 உலகக்கோப்பைப் போட்டிக்கு முதல் முறையாக நமிபியா அணி தகுதிபெற்றுள்ளது.

நமிபியா அணியின் ஆல்ரவுண்டர் ஸ்மித் 25 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.ஆனால், ஓமன் அணிக்கு வாய்ப்பு முடிந்துவிடவில்லை. அடுத்ததாக ஹாங்காங் அணியுடனான போட்டியில் வென்றால் ஓமன் அணி டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க முடியும்.மற்றொரு ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை எதிர்த்து சமவலிமை கொண்ட நெதர்லாந்து அணி மோதியது. லீக் ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய ஐக்கிய அரபு அணி இந்த ஆட்டத்தில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

81 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.உலகக் கோப்பைக்கு ஏற்கனவே தகுதி பெற்ற அயர்லாந்து அணியுடன் நெதர்லாந்து அணி அரையிறுதியில் மோத உள்ளது. அதேசமயம், ஸ்காட்லாந்து அணியுடனான ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி வென்றால் மட்டுமே அந்தஅணிக்கு தகுதிபெற முடியும் இல்லாவிட்டால் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய நிலைஏற்படும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *