BREAKING NEWS

டாடா கேப்பிட்டல் பைனான்ஷின் கடன் பத்திரங்கள் வெளியீடு


 

டாடா கேப்பிட்டல் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம் , டெபாசிட் திரட்டாத, வங்கிச் சாரா நிதிச் சேவை அளிக்கும் முக்கிய நிதி நிறுவனம். இது பல்வேறு பிரிவினரின் கடன் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான நிதி உதவி திட்டங்களை அளித்து வருகிறது.

இந்த நிறுவனம், ரூ. 1,000 முக மதிப்பு கொண்ட, பாதுகாப்பான, பங்குகளாக மாறாத, திரும்பப் பெறக்கூடிய கடன் பத்திரங்களை வெளியிடுகிறது. இந்த என்சிடிகள் வெளியீடு, 2018 செப்டம்பர் 10-ந் தேதி தொடங்குகிறது. ரூ. 1,000 முக மதிப்பு கொண்ட பாதுகாப்பான என்சிடிகள் – ரூ.6,00,000 லட்சம் மற்றும் ரூ. 1,000 முக மதிப்பு கொண்ட பாதுகாப்பற்ற பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள் – ரூ. 1,50,000 லட்சம் ஆக மொத்தம் ரூ. 7,50,000 லட்சம் (பகுதி I வெளியீடு). அடிப்படை வெளியீடு பகுதி 1 வெளியீடு ரூ. 200,000 லட்சம் உடன், என்சிடிகள் வெளியீட்டுக்கு அதிக ஆதரவு இருக்கும்பட்சத்தில் மேலும் ரூ. 750,000 லட்சம் திரட்டப்படும் என்று நிர்வாகம் சாராத செயல் இயக்குநர் ராஜீவ் சபர்வால் தெரிவித்தார்.




Leave a Reply